வராக்கடன் விவகாரம் 30,600 கோடி உத்தரவாதம் வழங்குகிறது ஒன்றிய அரசு: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: பொதுத்துறை வங்கிகளில் வராக்கடன் சுமையை குறைக்க, தேசிய சொத்து மறு சீரமைப்பு நிறுவனத்தின் மூலம் 30,600 கோடி வழங்க, ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘வங்கிகளின் வராக்கடன் பிரச்னையைத் தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துடன் (என்ஏஆர்சிஎல்) இணைந்து இந்திய கடன் தீர்வு நிறுவனம் அமைப்பது பற்றி 2020-21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.  

இதன் மூலம், 2 லட்சம் கோடியிலான பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் பிரச்னை தீர்க்கப்படும். இதில், முதல் கட்டமாக 90,000 கோடி வழங்கப்பட உள்ளது. இதற்காக, என்ஏஆர்சிஎல் வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு ஒன்றிய அரசு 30,600 கோடி உத்தரவாதம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 6 நிதியாண்டுகளில் வங்கிகளின் 5,01,479 கோடி வராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Related Stories: