கடன் பெற்று தருவதாக மோசடி டிக்-டாக் புகழ் பாஜ பெண் நிர்வாகி கைது: கணவரும் சிறையில் அடைப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோகவரம் மண்டலத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மனைவி காயத்ரி. தனியார் கல்லூரி ஸ்ரீதர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கோகவரம் பாஜ தலைவராக காயத்ரி உள்ளார். இருவரும் ‘டிக் டாக்’ மூலம் சினிமா பாடல்கள், வசனங்கள் பேசி பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், தனது மகளுக்கு வெளிநாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி  தரும்படி  ஏலூரை சேர்ந்த கவுரி சங்கர் என்பவர், ஸ்ரீதர், காயத்ரியை அணுகினார்.

தங்களுக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் பழக்கம் இருப்பதாகவும், கண்டிப்பாக மருத்துவ சீட் வாங்கி தருவதாகவும் இருவரும் கூறி பல லட்சம் பணம் வாங்கியுள்ளனர். இதேபோல், பலரிடம்  ரூ.44 லட்சம் வரை வசூலித்தனர். அதேபோல், அரிசி ஆலையை விரிவாக்கம் செய்ய 4 கடன் கேட்டுள்ளனர். அவர்களிடமும் 4 லட்சம் வசூலித்தனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ராஜமுந்திரி போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் தர், காயத்ரியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>