ரசாயனம் ஏற்றி வந்த லாரியில் கலப்பட டீசல் தயாரிப்பு: 3 பேர் கைது

திருவள்ளூர்: வண்டலூர் பைபாஸ் சாலையில் சித்துக்காடு கிராமம் அருகே ரசாயன வேதிப்பொருள் ஏற்றிவந்த ஒரு லாரி, நேற்று அதிகாலையில் சாலையோரத்தில் நின்றது. அந்த நேரத்தில், சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி ஜான் சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, லாரி உரிமையாளருக்கு தெரியாமல், வேதிப் பொருளுடன் டீசலை கலந்து போலி டீசல் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆற்காடு ராணிப்பேட்டையை சேர்ந்த டிரைவர் அயூப்கான் (50), அவரது நண்பர்கள் துத்துக்குடி பிரபாகரன் (42), அலெக்ஸ் (49) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.41 லட்சத்து 10 ஆயிரத்து 438 மதிப்பிலான வேதி பொருட்களை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

Related Stories:

>