மளிகை கடையில் ரூ.40 ஆயிரம் திருட்டு: ரெகுலர் கஸ்டமர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மளிகை கடையில், ரூ.40 ஆயிரம் திருடிய, ரெகுலர் கஸ்டமரை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் அடுத்து மேல்நல்லாத்தூரில் மளிகை மற்றும் காய்கறி கடை நடத்தி வருபவர் சுப்புகண்ணன். திருச்சி செல்வதற்காக தனது கடையை மணவாள நகரை சேர்ந்த தனது மைத்துனர் பிரவீன்குமார் (20) என்பவரிடம் விட்டு சென்றுள்ளார். இதை தொடர்ந்து பிரவின்குமார் வியாபாரம் நடத்தி வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக பிரவீன்குமார், கடையில் விற்பனை செய்து 40 ஆயிரம் பணம் மற்றும் ஏடிஎம், கார்டு, பான் கார்டு ஆகியவற்றை ஒரு பச்சை நிற பையில் வைத்து கல்லாவில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் மலலை திடீரென மாலை 4 மணியளவில், பணம் வைத்திருந்த பையை காணாமல் பிரவீன்குமார் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவர், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில், கடைக்கு வழக்கமாக வந்து செல்லும் மணவளநகர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மேகநாதன் (40) என்பவர், அரிசி வாங்கி கொண்டு பணம் கொடுக்கும்போது கல்லாவில் வைத்திருந்த பணத்தை பார்த்துள்ளார். அவருக்கு மீதி பணத்தை கொடுத்து விட்டு வேறு வாடிக்கையாளரிடம் பேசி கொண்டிருந்தபோது, மேகநாதன் பணத்தை திருடி சென்றது பதிவாகி இருந்தது.

புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்தனர். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>