சென்னை வந்தார் தமிழக புதிய கவர்னர் ஆர்.என்.ரவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கவர்னர் ஆ.என்.ரவி, விமானம் மூலம் நேற்றிரவு சென்னை வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். தமிழக ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். நாகலாந்து மாநில கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் டெல்லியிலிருந்து பயணிகள் விமானம் முலம் நேற்றிரவு 8.18 மணிக்கு ஆர்.என்.ரவி சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி நாளை (செப்.18) பதவியேற்கிறார்.

Related Stories:

>