சமூக நீதி நாள் இன்று கொண்டாட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்பு

சென்னை: தந்தை பெரியாரின் 143வது பிறந்த நாள், சமூக நீதி நாளாக கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் நாளை ‘சமூக நீதி நாள்’ ஆகக் கொண்டாடுவோம் என்று முதல்வர் அறிவித்ததோடு அன்றையதினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் அவர் வாழ்ந்த நினைவு இல்லத்திலும், கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள நினைவிடத்திலும் தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியும் இன்று நடைபெறுகிறது. அந்தவகையில், இன்று பெரியாரின் 143வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட உள்ளது.இதை முன்னிட்டு அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில், மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும், முதல்வர் தலைமையில் இன்று காலை தலைமைச் செயலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

Related Stories:

>