மோடி பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததானம் வினாடி வினா போட்டி

சென்னை: தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்ட அறிக்கை: பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள்மற்றும் அவரது பொது சேவையில் அரசாங்க தலைவராக 20 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு, தமிழக பாஜ இளைஞரணி சார்பில் ‘‘சேவை மற்றும் சமர்ப்பணம்’’ என்ற பிரசாரம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை சென்னை கடற்கரையில் நடைபெறும் தூய்மை பணியை துவக்கி வைக்கிறார். செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரையிலான நாட்களில் ரத்ததான முகாம்கள், மரக்கன்று நடுதல், வினாடி வினா போட்டிகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ஒன்றிய அளவில் நடைபெறும்.

Related Stories:

>