முகக் கவசம் அணிய வலியுறுத்தி ரெட் லைட் சிக்னல் கேப்பில் ‘டான்ஸ்’ ஆடிய இளம்பெண்: விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்

இந்தூர்: முகக்கவசம் அணிய வலியுறுத்தி இந்தூர் நகர சிக்னல் பகுதியில் டான்ஸ் ஆடிய இளம்பெண்ணுக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் டவுன் போக்குவரத்து சிக்னலில் சாரல் மழைக்கு மத்தியில், இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி, அந்த ெபண்ணுக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஸ்ரேயா கல்ரா என்ற இளம்பெண், முகக்கவசம் அணிந்தவாறு இந்தூர் ரசோமா சதுக்கத்தின் சிக்னல் பகுதியில் ‘டான்ஸ்’ ஆடினார். அதனால், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி அவருக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்ரேயா கல்ரா கூறுகையில், ‘ரசோமா சதுக்கத்தின் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த பிறகு, வாகனங்கள் வரிசைகட்டி நின்றன. அப்போது சினிமா பாடல் ஒன்றுக்கு டான்ஸ் போட்டேன். அதனை எனது நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தவே, சிக்னலில் டான்ஸ் ஆடினேன். மீண்டும் பச்சை விளக்கு எரிந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிட்ேடன்’ என்றார். இதுகுறித்து மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், ‘சிக்னலில் ஸ்ரேயா கல்ரா ஆடிய டான்ஸ் ஏற்கக் கூடியது அல்ல; அவர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்களுக்காக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்றார்.

Related Stories: