விபத்தில் செத்துட்டேனா? வதந்தி குறித்து நடிகை ஆவேசம்

சண்டிகர்: அரியானாவை சேர்ந்த நடிகை சப்னா சவுத்ரி, விபத்தில் இறந்துவிட்டதாக வெளியான வதந்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரியானா மாநிலம் சிர்சா அருகே நடந்த சாலை விபத்தில் நடிகையும், நடனக் கலைஞருமான சப்னா சவுத்ரி இறந்துவிட்டதாக நேற்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இதனால், சப்னாவின் ரசிகர்களும், நெருங்கிய வட்டாரங்களும் அதிர்ச்சியடைந்தன. சில மணி நேரங்களில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் சப்னாவின் பேட்டி வெளியானதும், அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

இதுகுறித்து, சப்னா கூறுகையில், ‘நான் இறந்துவிட்டதாக வதந்தி பரவியதும், எனது குடும்பத்தினரும், உறவினரும், நண்பர்களும், ரசிகர்களும் தொடர்ந்து என்னை செல்போனில் அழைத்தவண்ணம் இருந்தனர். இந்த வதந்தியை கேட்ட பின்னர், என் குடும்பத்தினர் மிகவும் வருத்தமடைந்தனர். இதனை எப்படி சமாளிப்பது என்றுகூட அவர்களுக்குத் தெரியவில்லை. எதற்காக இதுபோன்ற வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தவறான புரிதலின் காரணமாக இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனரா? என்பதும் தெரியவில்லை’ என்று ஆவேசமாக கூறினார்.

Related Stories:

>