பல ஆண்டாக தேடப்பட்டு வந்த ஐஎஸ் தலைவன் சுட்டுக் கொலை: பிரான்ஸ் அதிபர் தகவல்.!

பாரிஸ்: பல ஆண்டாக தேடப்பட்டு வந்த ஐஎஸ் தலைவன் அல்-சஹ்ராவி என்பவன், கிரேட்டர் சஹாராவில் பிரான்ஸ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டான். கிரேட்டர் சஹாராவில், ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அட்னான் அபு வாலிட் அல்-சஹ்ராவி என்பவர், பிரான்ஸ் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அதில், ‘தீவிரவாதக் குழுக்களுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் இது மிகப்பெரிய வெற்றியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டில் பிரான்ஸ் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் அல்-சஹ்ராவிக்கு தொடர்பு இருந்ததால், அவன் தேடப்பட்டு வந்தான். அதேபோல், அமெரிக்க துருப்புக்கள் மீது நைஜிரில் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தான். மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோ பிராந்தியத்தில் நடந்த பெரும்பாலான ஐஎஸ் தாக்குதல்களுக்கு கிரேட்டர் சஹாராவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர்தான் காரணம் என்று கூறப்படுகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட சஹ்ராவி, ஏற்கனவே இஸ்லாமிய மாக்ரெப்பின் அல்-கொய்தா உறுப்பினராக இருந்தான்.

Related Stories:

>