தவறான உறவுக்கு இடையூறு!: காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனை கொலை செய்த கொடூரத் தாய் கைது..சோழவரம் அருகே பரபரப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தவறான உறவுக்கு இடையூறாக இருந்த மகனை கொன்ற தாய், காதலனுடன் கைது செய்யப்பட்டார். சோழவரம் அடுத்த நெடுவரம்பாக்கம் பகுதியை சேர்ந்த துர்கா என்பவரே கொடூர செயலில் ஈடுபட்டவர். இவருக்கும் நெடுவரம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியரான கோபால் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் தவறான உறவாக மாறியது. இது 9ம் வகுப்பு படித்த துர்காவின் மூத்த மகன் சூர்யாவுக்கு தெரியவரவே அதிர்ச்சியடைந்த துர்கா, காதலனுடன் சேர்ந்து மகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை நத்தம் கிராமத்தில் இருந்த சூர்யாவை வேறொரு சிறுவன் மூலம் தனியே அழைத்து சென்ற கோபால், கழுத்தை நெரித்து கொலை செய்து கோவில் குளத்தில் வீசியிருக்கிறார். சிறுவனை காணவில்லை என்று தாத்தா கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தாயே காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி மகனை கொன்றது கண்டுபிடித்தனர். இதனையடுத்து துர்கா மற்றும் அவரது காதலன் கோபால் ஆகியோரை சோழவரம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>