சிக்கன் தம் பிரியாணி

செய்முறை:

பாஸ்மதி  அரிசியைத் தவிர சிக்கனுடன் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து, தயிர் சேர்த்து ஊற வைக்கவும். (2 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்கவும்) ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் ஊற்றி, பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2 சேர்த்து வதக்கவும். பின் ஊற வைத்த மசாலா சிக்கனை 15 நிமிடம் வேக வைக்கவும். பின் வேக வைத்த அரிசியை மேலே சேர்த்து, நெய், குங்குமப்பூ, பால், லெமன், கரம் மசாலா, Fried onion, புதினா, கொத்தமல்லி  தூவி 15 நிமிடம் தம் போட வேண்டும். இப்போது சிக்கன் தம் பிரியாணி ரெடி. இதனுடன் தயிர் பச்சடி மற்றும் சிக்கன் குருமா சேர்த்து பரிமாறவும். பாஸ்மதி அரிசியை வேக வைக்கும் முறை மற்றும் தம் போடும் முறையை முன்பக்கம் பார்க்கவும்.

குறிப்பு: தம் பிரியாணியை சூடாக சாப்பிடுவதைவிட சிறிது ஆற வைத்து சாப்பிட சுவை அதிகரிக்கும்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு