வீடு புகுந்து ரவுடிகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

சென்னை:  கே.கே.நகர் வன்னியர் தெருவை சேர்ந்தவர் சுமன்ராஜ் (36). ரவுடி. கே.ேக.நகர் பகுதியில் பிரபல ரவுடியான இவரது சகோதரன் மணிகண்டன் (எ) புறா மணி 2018ல் வானகரம் மீன் மார்க்கெட் அருகே கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 10 பேரை போலீசார் அப்போது கைது செய்தனர். சகோதரன் ெகாலைக்கு பழிவாங்க புறா மணியின் சகோதரன் சுமன்ராஜ் நண்பர் தக்காளி பிரபாவுடன் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுமன்ராஜ் தனது நண்பர் தக்காளி பிரபாவுடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் ஒன்று சுமன்ராஜூடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. மேலும் திடீரென 4 நாட்டு வெடிகுண்டுகளை சுமன்ராஜ் மீது வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக சுமன்ராஜ் மற்றும் நண்பர் தக்காளி பிரபா தப்பி விட்டனர்

Related Stories:

>