சில்லி பாய்ண்ட்...

* கத்தார் தலைநகர் தோஹாவில் செப். 28ம் தேதி தொடங்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தேசிய பயிற்சி முகாமில் பங்கேற்கத் தவறியதால் நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா தேர்வு செய்யப்படவில்லை. ஆண்கள்: மானவ் தக்கார், சரத் கமல், சத்தியன், ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி. மகளிர்: சுதிர்தா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா, அயிகா முகர்ஜி, அர்ச்சனா காமத். கலப்பு இரட்டையர்: மானவ் தக்கார் - அர்ச்சனா காமத், ஹர்மீத் தேசாய் - ஸ்ரீஜா அகுலா.

* லண்டனில் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருந்ததாக, அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் வீரர் திலீப் தோஷி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வீரர்கள் முன் அனுமதி பெறவில்லை என்று பிசிசிஐ தரப்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் வலைப்பயிற்சிக்கான வேகப் பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்த குல்வந்த் கெஜ்ரோலியா பிரதான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக கெஜ்ரோலியாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி அணி வீரர்கள் ரபாடா, நோர்ட்ஜ், த்வார்ஷுயிஸ் ஆகியோர் நேற்று துபாய் சென்றடைந்தனர்.

* ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி (717 புள்ளி) 4வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். கே.எல்.ராகுல் (699) 6வது இடத்தில் நீடிக்கிறார். டேவிட் மலான் (841), பாபர் ஆஸம் (819), ஆரோன் பிஞ்ச் (733) முதல் 3 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சு டாப்-10ல் ஒரு இந்திய பவுலர் கூட இடம்பெறவில்லை.

* பயிற்சி ஆட்டத்தில் ஆர்சிபி ஏ அணிக்காக களமிறங்கிய ஏ.பி.டி வில்லியர்ஸ் 46 பந்தில் 104 ரன் (7 பவுண்டரி, 10 சிக்சர்) விளாசினார்.

Related Stories: