பழ கேசரி

செய்முறை:

வெறும் வாணலியில் ரவையை மணக்க, சிவக்க வறுத்து எடுக்கவும். அடிகனமான வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, ஏலக்காய் வறுத்து, உலர் திராட்சை போட்டு தேவையான நீர் விட்டு கொதி வந்ததும் ரவை சேர்த்து கிளறி வெந்ததும் சர்க்கரை, எஸென்ஸ் விட்டு சர்க்கரை கரைந்ததும் பழக்கூழ் போட்டு கிளறி அனைத்தும் வெந்ததும்  டூட்டி - ஃபுரூட்டி, செர்ரி, குங்குமப்பூ தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: சீசனுக்கு தகுந்த மாதிரி பழங்களை மாற்றிக்கொள்ளலாம். பப்பாளி, மாம்பழம், பலாச்சுளை என்று. எஸென்ஸ் பொதுவாக வெனிலா
பயன்படுத்தலாம்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு