×

நடப்பு கல்வியாண்டு சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது

சென்னை: நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. சிறப்புப்பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% தனி ஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கு இன்று காலையிலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு பிற்பகலில் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு 440 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1.5 லட்சம் மாணவ மாணவிகளுக்கான இடங்கள் உள்ளன. இந்த கலந்தாய்வில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு 1.40 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இன்று தொடங்கக்கூடிய இந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் மூலமாக சேரும் மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை முதல்வர் வரும் 18ஆம் தேதி மாணவர்களுக்கு வழங்க உள்ளார். முதல் முறையாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கக்கூடிய காரணத்தினால் முதல்வர் இந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் நேரடியாக வரவைக்கப்படாமல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு உதவி மையங்கள் மூலமாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் உயர்கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Engineering consultation
× RELATED ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய...