×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா: 284 பேர் பலி: 38,012 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.43 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.33 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 27,176 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்தது.

* புதிதாக 284 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,43,497 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,012 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,25,22,171 உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,51,087 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 75,89,12,277 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Tags : Corona ,India , India, Corona, Discharge, Health
× RELATED கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி