×

மாநிலங்களவை தேர்தல் சுஷ்மிதாவுக்கு திரிணாமுல் ‘சீட்’

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனதைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரசின் மனாஸ் பூனியா தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அம்மாநிலத்தில் காலியாக உள்ள இந்த ஒரு இடத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக சுஷ்மிதா தேவ்வை நிறுத்தப்படுவதாக அக்கட்சி நேற்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவியாக இருந்த சுஷ்மிதா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவியது குறிப்பிடத்தக்கது.

Tags : Trinamool ,Sushmita , Trinamool 'seat' for Sushmita
× RELATED அரசியலுக்கு முழுக்கு போட்ட மாஜி பாஜ...