×

சில்லி பாய்ண்ட்...

* ஐபிஎல் தொடரின் 2022 சீசனில் புதிதாக சேர்க்கப்பட உள்ள 2 அணிகளின் உரிமம் பெறுவதற்கான ஆன்லைன் ஏலம் அக்.17ம் தேதி நடைபெற உள்ளது.
* சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் களமிறங்கும் பிஎஸ்ஜி அணியில் நட்சத்திர வீரர்கள் மெஸ்ஸி, நெய்மர் இடம் பெற்றுள்ளனர்.
* 6 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அடுத்த மாதம் வங்கதேசம் செல்லும் பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டியில் விளையாட உள்ளதாக பாக். கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* இந்தியா - பின்லாந்து அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பின்லாந்தின் எஸ்பூ நகரில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
* தூரந்த் கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் முகமதன் எஸ்சி - பெங்களூர் யுனைட்டட் அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் பெங்களூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் ஜேம்ஸ் சிங் (64வது நிமிடம்), லூக்கா (90’) கோல் அடித்தனர். ஹாட்ரிக் வெற்றியுடன் முதல் இடம் பிடித்த பெங்களூர் அணி (9 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.

Tags : Silly Point ...
× RELATED சில்லி பாய்ண்ட்...