பிச்சு போட்ட கோழி

செய்முறை

கோழியினை நன்றாக கழுவி மஞ்சள் தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேகவைத்து இறைச்சியை மட்டும் தனியாக சின்னச் சின்ன துண்டுகளாக பிய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணை சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா வதங்கியதும், அதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பிய்த்து வைத்து இருக்கும் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிக்கன் மசாலாவுடன் நன்கு இணைந்து வந்தவுடன் கறிவெப்பிலை சேர்த்து அலங்கரித்து இறக்கவும்.

Tags :
× RELATED வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு