சரியும் தங்கம் விலை!: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 சரிந்து, ரூ.35,496க்கு விற்பனை..இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 24 ரூபாய் குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்திலும் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டு வருகிறது. இன்றும் விலைச்சரிவு காணப்படுகிறது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 35,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, சவரனுக்கு 24 ரூபாய் சரிந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4,437 ரூபாய்க்கும், ஒரு சவரன் 35,496 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் 8 கிராம் 38,408 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 67.80 காசுக்கும், ஒரு கிலோ 67,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த விலை குறைவு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை அளித்திருக்கிறது.

Related Stories:

>