×

பஜாரில் புதுசு

பாய்ஸ் ஸ்கூட்டர் என்எக்ஸ் 120

பாய்ஸ் ஸ்கூட்டர் என்எக்ஸ் 120 ஸ்டாண்டர்டு என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2200 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார் கொண்ட இந்த ஸ்கூட்டரில், 72 வோல்ட், 20 ஏஎச் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 55 முதல் 110 கி.மீ வரை செல்லலாம். அதிகபட்சமாக மணிக்கு 45 கி.மீ வேகம் வரை செல்லும். பேட்டரிக்கு 2 ஆண்டு, மோட்டாருக்கு ஓராண்டு வாரண்டி உள்ளது. முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகும். கோம்பி பிரேக், மொபைலுடன் இணைத்துக் கொள்ள புளூடூத் வசதி, டிஜிட்டல் கன்சோல், எப்எம் ரேடியோ, எல்இடி ஹெட்லைட், டெயில் லைட் மற்றும் சிக்னல் லைட்டுகள் உள்ளது. எடை 102 கிலோ.  4 வண்ணங்களில் கிடைக்கும். ஷோரூம் விலையாக சுமார் 86,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம், என்எக்ஸ் 60 என்ற ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் ஷோரூம் விலை சுமார் 74,999. இதில் 720 வோல்ட் லெட் ஆசிட் பேட்டரி உளளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 45 கி.மீ. ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ தூரம் வரை செல்லலாம்.


யமஹா ஹைபிரிட் ஸ்கூட்டர்கள் (விலை 76,830 முதல்)

யமஹா நிறுவனம் ஸ்போர்ட்டி ரே இசட்ஆர் 125 எப்ஐ ஹைபிரிட் மற்றும் அட்வென்சர் ரெடி ஸ்டிரீட் ரேலி 125 எப்ஐ என்ற இரண்டு ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இதில், ரே இசட்ஆர் 125 ஷோரூம் துவக்க விலையாக 76,830 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஏர் கூல்டு பியூயல் இன்ஜக்‌ஷன் (எப்ஐ) 125 சிசி புளூ கோர் இன்ஜின், 8.2 பிஎஸ் பவரையும், 10.3 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு ஸ்கூட்டர்களுமே 99 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் சிஸ்டம், எலக்ட்ரிக் மோட்டாராக பவர் அசிஸ்டென்ட் போல்  செயல்படுகிறது.

வாகனத்தை இயக்க தொடங்கி 3 நொடிகளுக்கு பிறகு, இன்ஜின் குறிப்பிட்ட ஆர்பிஎம் அளவை கடந்ததும், இந்த பவர் அசிஸ்ட் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இதனை, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள விளக்கு எரிவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். யமஹா மோட்டார்சைக்கிள் கனெக்ட்-எக்ஸ் ஆப்சை மொபைலில் நிறுவி இந்த ஸ்கூட்டர்களுடன் புளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் பார்க்கிங், ரைடிங் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.

போர்ஷே
மிஷன் ஆர்

போர்ஷே மிஷன் ஆர் கான்சப்ட் கார், முனிச் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. இதில் உள்ள இரட்டை எலக்ட்ரிக் மோட்டார், ஸ்டாண்டர்டு மோடில் 611எச்பி திறன் வெளிப்படுத்துவதாகவும், குவாலிபையிங் மோடில் 1,088 எச்பி திறனை வெளிப்படுத்துவதாகவும் அமையும். முன்புற மோட்டார் 435 எச்பி பவரையும், பின்புற மோட்டார் 653 பவரையும் வெளிப்படுத்தும். அதிகபட்சமாக 300 கி.மீ வேகத்தில் செல்லும். 2.5 நொடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் எனவும், காரின் எடை 1500 கிலோவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இடம்பெற உள்ள புதிய தொழில்நுட்பம் மூலம், 15 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. 2025ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இது அறிமுகம் ஆகும் என நிறுவன வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மோட்டோ கஸி வி85டிடி (விலை சுமார் 15,40,000 முதல்)

மோட்டோ கஸி வி85 டிடி பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பிஎஸ்6 தர நிலையிலான 853 சிசி இன்ஜின் உள்ளது. இந்த வி-டிவின் இன்ஜின் 7500 ஆர்பிஎம்-ல் 75 பிஎச்பி பவரையும், 5000 ஆர்பிஎம்-ல் 82 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். குறைந்த மற்றும் நடுத்தர வேகத்திலும் அதிக டார்க் வெளிப்டுத்தும் திறன் இந்த பைக்கில் உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இதில், டியூப்லெஸ் டயர்கள் கொண்ட ஸ்போக் வீல், 23 லிட்டர் பெட்ரோல் டேங்க், மோனோ ஷாக் அப்சர்வர், டிஸ்க் பிரேக் உட்பட பல அம்சங்கள் இதில் உள்ளன. ஷோரூம் விலையாக 15,40,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா யாரிஸ்

டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான மாடல்களுள் ஒன்று யாரிஸ். தற்போதைய யாரிஸ் கார் ஏற்கெனவே 3 முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான மேம்படுத்தப்பட்ட யாரிஸ் கார் 2016ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்பிறகு சில சந்தைகளில் 2018ல் மாற்றங்கள் செய்து சந்தைப்படுத்தப்பட்டது. இந்நிலையில்,  அடுத்த தலைமுறைக்கான யாரிஸ் கார் டி92ஏ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. யாரிஸ் இன்ஜின் திறன் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை . இருப்பினும், டொயோட்டா ரெய்ஸ் எஸ்யுவி மாடலில் உள்ள 1.5 லிட்டர் மற்றும் 1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் போன்றதாக அமையலாம் எனவும், ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய கார் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Fresh in the bazaar
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்