நன்றி குங்குமம் தோழி
உங்களுக்கு 9-5 வேலை டார்ச்சராக இருப்பதற்கு இவையே காரணங்கள்...
வேறு ஒருவரின் நிறுவனத்தை கட்டி எழுப்புகிறோம் எனும் சிந்தனை...என்னால் தனியே ஒரு நிறுவனத்தை இதைவிட சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும் எனும்போது, ‘இந்த சாதாரண கம்பெனியை வளர்க்க எதற்கு நான் வியர்வை சிந்த வேண்டும்’ எனும் நினைப்பு வருகிறதா? வேலை மேல் பற்றில்லாமல் இருக்கிறதா? ஒரு பொருளாதார செக்யூரிட்டிக்காக கொஞ்சம் காசு சேர்த்து வைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்துவிடுங்கள்!
உங்கள் திறமைக்கு ஏற்ற சம்பளம் இல்லை...
உண்மையில், உழைப்புச் சுரண்டல் உலகம் முழுவதுமே சாதாரணம் ஆக்கப்பட்டிருக்கிறது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லாதபோது, அந்த வேலையின் மீது சலிப்பு வரத்தானே செய்யும்?உங்கள் படைப்பாற்றலுக்கு இடம் இல்லை...நம் கனவுகள் எல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் போலவோ, ஜெஃப் பீஸாஸ் போலவோ இருக்கும்போது, அதை எல்லாம் அப்படியே ரப்பர் வைத்து அழித்து, ஒரு சின்னக் கட்டத்திற்குள் நம்மை அடைக்கப் பார்ப்பது போன்ற வேதனை வேறு எதுவுமே இல்லை!வேலை போரடிக்கிறதுசவால்களை சந்திக்க பிறந்தவர்களுக்கு, திரும்ப திரும்ப ஒரே நாளை வாழ்வது போரடிக்கும்.இயந்திரத்தனமாக ஒரு வேலையை செய்துகொண்டே இருப்பதற்காகவா பிறந்தோம் என யோசிக்கத் தோன்றும். அதற்கான பதில், நிச்சயமாக இல்லை! உங்களுக்கான சவால்களை நீங்களே தேடிக் கொள்ளுங்கள் என்று இந்த பிரம்மாண்டம் குறிப்பு கொடுக்கிறது என்று அர்த்தம்!நிரந்தரமின்மைவேலையும், சம்பளமும் எவ்வளவு தற்காலிகமானது என்பதை உணர்த்தும்படி மேலிடத்தில் இருந்து பேச்சுகள் வந்து கொண்டிருந்தால், வேலை வாழ்க்கையில் ஒரு நெருடல் ஏற்படும். அதே பயத்தில் வேலை செய்யும்போது ஏற்படும் நடுக்கம், வேலையை வெறுக்க வைக்கும்!
சக ஊழியர்கள்உங்கள் மன வளர்ச்சிக்கு ஏற்றபடியான சக ஊழியர்கள் கிடைக்கவில்லை என்றால், வேலை நேரம் நரகமாகவே இருக்கும்! புரளி பேசுவது, அரசியல் செய்வது, கேங்க் அமைப்பது என முழு நேரமும் உங்களை துன்புறுத்தவே ஒரு கூட்டம் இயங்கிக்கொண்டிருப்பதாக தோன்றும்.தொழில்முனைவால் என்ன சாதகம்?நம் டைம்டேபிள் நம் கையில்!
நாம் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானித்துக் கொள்கிறோம். எப்போது வேலையைத் தொடங்க வேண்டும், எப்போது முடிக்க வேண்டும் என்பதையெல்லாம் நாமேதான் கணக்குப் போடுகிறோம். சுத்தமாக முடியாவிட்டால், யாரிடமும் கேட்காமலேயே விடுமுறை கூட எடுத்துக் கொள்ளலாம்!நோ டிரெஸ் கோட்!இஸ்திரி போட்ட சட்டை அணிந்து, அதை இன் செய்துகொண்டு போக வேண்டும் என்றோ, மடிப்பு கலையாத சேலை அல்லது சுடிதார் அணிந்து ஷால் பின் போட்டு போக வேண்டும் என்ற அவசியமோ இல்லை. நம் தொழில் என்பதால், நமக்குப் பிடித்தமான உடையை, நமக்குப் பிடித்ததைப் போல அணிந்து கொண்டு போகலாம்.எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்சமையலறையில் தோசை சுட்டு சாப்பிட்டுக் கொண்டே அல்லது வீட்டை சுத்தம் செய்துகொண்டே லேப்டாப்பில் வேலை செய்யலாம். எங்காவது வெளியூர் போக நேர்ந்தாலும், வேலையில் எந்தப் பிரச்னையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.உதவி பெறுவதில் தவறில்லை இன்றைய சூழலில் அதிகமான மனச்சோர்வு ஏற்படுகிறது. சிலரால் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போவதும் இயல்பு. அவ்வேளைகளில், நமது நண்பரோ, நம்பிக்கையானவரையோ சில நாட்கள் அல்லது சில மணி நேரம் நமது வேலையை கவனித்துக்கொள்ளசொல்லலாம். யாரும் எதுவும் கேட்கப் போவதில்லை.‘போர் அடிக்குது!’ என்பதற்கே இடமில்லை நம் வேலை, நாம் தொடங்கியது என்பதால் ஒவ்வொரு நாளும் புது அனுபவமாகவே இருக்கும். எனவே, போர் அடிக்குது என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. அப்படியே போர் அடித்தாலும், உடனடி மாற்றங்களை நாமே செய்து கொள்ளலாம்.கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாமே!வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்காமல் எதுவுமே சாத்தியம் இல்லை!கொஞ்சம் ரிஸ்க் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். நாமே தொழில்முனைவு செய்யும்போது பல சவால்களும், சிரமங்களும் வந்தாலும், அதைக் கடந்துவிட்டு, அனைத்தும் நம்மால்தான் நடந்தது என்று நினைக்கும்போது ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அதற்காகவே ரிஸ்க் எடுக்கலாம்!எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்!நாம் தொழில்முனைவு செய்வதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று, பணம் சம்பாதிப்பது. தொழில்முனைவில் நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. ‘ஸ்மார்ட் வொர்க்’ செய்து அதிகமாகச் சம்பாதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது! எல்லாம் நம் கையில்தான். மேலும், எவ்வளவு சம்பாதித்தாலும், அதை மீண்டும் முதலீடு செய்வது, செலவு செய்வது எல்லாமே நம் கையில்தான்.மேற்சொன்ன கருத்துக்களை எல்லாம் ஒப்பிட்டு பார்த்து, உங்களுக்கு எது பொருந்திப்போகும் என முடிவுக்கு வருவது உங்கள் சாமர்த்தியம்! உயரத்திற்கு பயந்து நதியில் குதிக்காமல் மேலேயே நிற்க போகிறீர்களா அல்லது கீழ் இருக்கும் நதியில் குதித்து நன்றாக முங்கி ஒரு குளியல் போடப் போகிறீர்களா?தொழில்முனைவு செய்வதற்கான மனோநிலை நம்மிடம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு சின்ன டெஸ்ட்! அடுத்த இதழில்...