அழகு டூ ஆன்மிகம்!

நன்றி குங்குமம் தோழி

நித்ரா முழுமையான ஆப்...


ஒவ்வொரு பெண்களுக்கும் ஒரு விருப்பம் இருக்கும். அது அவர்களின் வயதிற்கு ஏற்ப மாறுபடும். கல்லூரி மற்றும் டீன் ஏஜ் பெண்களுக்கு எப்போதும் தாங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணம் உண்டு. அதற்காக அவர்கள் பல அழகு சாதனப் பொருட்கள் மற்றும் குறிப்புகளை பின்பற்றுவார்கள்.

கல்யாணமான பெண்கள் தன் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு விதவிதமாக சமைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பல இணையத்தில் சமையல் குறிப்புகளை தேடுவது வழக்கம். இதன் மூலம் வித்தியாசமான உணவுகளை தங்களை நேசிப்பவர்களுக்கு செய்து மகிழ்கிறார்கள்.

 கல்லூரி முடித்த கையோடு ஒரு வேலைக்கு செல்லவே இந்தக் காலப் பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களின் படிப்புக்கு ஏற்ப வேலை எங்குள்ளது என்று இணையத்தில் மட்டும் இல்லாமல் தினசரிகளிலும் தேடுகிறார்கள். நடுத்தர வயதுப் பெண்கள் தங்களின் வாரிசுகளுக்கு ஒரு நல்ல துணையை தேடுகிறார்கள். வயதானவர்களுக்கு இந்தக் கவலை எல்லாம் ஏதும் இல்லை.

அவர்களின் பெரிய பொழுதுபோக்கே தங்களின் ராசிக்கு என்ன பலன் என்று பார்ப்பது. இது போன்ற பலதரப்பட்ட பெண்களின் விருப்பங்களை பூர்த்தி செய்கிறது நித்ரா ஆப். இதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் தனித்தனி ஆப் மூலமாக தமிழில் உள்ளது.

பார்லருக்கு சென்று நேரம் மற்றும் உங்களின் பணத்தை இனி விரயமாக்க வேண்டாம். உங்களுக்காகவே வீட்டில் இருந்தபடியே இயற்கை முறையில் உங்களை அழகுப் படுத்திக் கொள்ளலாம். இந்த அழகுக்குறிப்பு ஆப் முழுக்க முழுக்க இலவசம் என்பதால் இதற்கு இன்டர்நெட் வசதியும்
அவசியமில்லை. இந்த ஆப் உங்களுக்கு தினமும் ஒரு அழகுக் குறிப்பினை வழங்கி வருவதால், நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் இதனை பின்பற்றலாம்.

அழகுக் குறிப்பு என்றதும் பெரும்பாலும் பெண்கள் அவர்களின் முகத்திற்கு மட்டுமே கவனம் செலுத்துவார்கள். ஆனால் நித்ரா உங்களின் முழு தேகத்தின் அழகை பராமரிக்க உதவுகிறது. அதாவது முகம், தலைமுடி, கண்கள், சருமம், உடல், கை, கால், பாதம் என ஒவ்வொன்றுக்கும் அதற்கேற்ப அழகுக் குறிப்பினை வழங்குகிறது. அனைத்தும் இயற்கை முறையில் வழங்குவதால், எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

 இந்த ஆப்பினை இலவசமாகவும் எளிதாகவும் உங்களின் செல்போனில் டவுண்லோட் செய்யலாம். பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் அழகுக் குறிப்புகள் உள்ளன. உங்களுக்கு நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுக்கும் இந்த அழகுக் குறிப்பினை பகிரலாம். இதில் பல வகையான அழகுக் குறிப்புகள் இருப்பதால், உங்களின் தேவைக்கு ஏற்ப அதனை பார்த்து பயன் பெறலாம்.

வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது முழு உடல் குறித்த அழகுக் குறிப்புகள், அழகு சார்ந்த பிரச்னைகளுக்கான தீர்வுகள் மற்றும் ஒவ்வொரு இயற்கை சார்ந்த பொருட்கள் அதன் பயன்பாடு மற்றும் நன்மைகள் என பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

சுவையான சாப்பாடு என்றால் யாருக்கு தான் வேண்டாம் என்று சொல்ல தோணும். அவர்களுக்காகவே நித்ரா சமையல் ஆப் உங்களின் அன்பானவர்களுக்கு சுவையான உணவினை சமைக்க ஒரு வழிகாட்டியாக உள்ளது. இந்த ஆப் சமைக்க தெரியாதவர்கள், பேச்சலர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒவ்வொரு சைவம் மற்றும் அசைவ உணவுகளை நாம் எவ்வாறு சமைக்க வேண்டும் என்பதை படிப்படியாக வழங்கியுள்ளது. இதனால் சமையலில் அ, ஆ, இ... கூட தெரியாதவர்கள் இதைப் பார்த்து கற்றுக் கொள்ளலாம். மார்டர்ன் ரெசிபிகள் மட்டும் இல்லை கிராமத்து சமையல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் தென்னிந்திய, வட இந்திய மற்றும் ரெஸ்டாரன்ட் வகை உணவுகளையும் எளிதாகவும் சுவையாகவும் இந்த ஆப் மூலம் கற்றுக் கொள்ளலாம்.     பொதுவாக இன்று என்ன சமைக்கலாம் என்று நாம் மண்டையை உடைத்துக் கொள்வோம். அந்த கவலை இனி இல்லை. காரணம் செட்டிநாடு, அரிசி வகை உணவுகள்,துவையல், பிரியாணி, காய்கறி உணவுகள், அசைவ உணவுகள், காலை சிற்றுண்டி உணவுகள், இரவு நேர உணவுகள், இனிப்புகள், சூப் வகைகள்... என அனைத்து வகை உணவுகளும் இதில் உள்ளன. மேலும் ஒவ்வொரு உணவு சமைக்கும் போதும் அதற்கான டிப்ஸ்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால், சமைக்கும் போது சின்னச் சின்ன தவறு ஏற்பட்டால் அதை எளிதில் சரி செய்து கொள்ள எளிதாக உள்ளது.

12 ராசிகளின் தினசரி பலன்களை உடனுக்குடன் இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது மட்டும் இல்லாமல் அந்தாண்டு நடைபெறும் மிகவும் முக்கியமான குரு பெயர்ச்சி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள், புத்தாண்டு பலன்கள்  மற்றும் ராகு, கேது பலன்களும் இதில் அதற்கேற்ப பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் உங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது.  

 தினசரி பலன்கள் மூலம் உங்களின் அன்றைய நாள் எவ்வாறு உள்ளது என்று தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் ராசிக்குள் சந்திரன் அல்லது சந்திராஷ்டமம் போன்ற விவரங்களையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களுக்காகவே அமைக்கப்பட்ட பிரத்யேகமான வேலைவாய்ப்பு போர்டல். உங்களின் திறமைக்கு ஏற்ப வேலையினை தேர்வு செய்ய மிகவும் வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து அவ்வப்போது இதில் அப்டேட் செய்யப்படுகிறது.

வேலைவாய்ப்பு பற்றிய குறிப்பு மட்டும் இல்லாமல், அரசு வேலை சார்பாக நிகழ்த்தப்படும் தேர்வுகளால TNPSC, சிவில் சர்வீஸ், வங்கி தேர்வு, சி.டி.இ.டி போன்ற தேர்வுகள் குறித்த விவரங்களும் இதில் அவ்வப்போது தெரிவிக்கப்படும்.

   இதற்கு வாடிக்கையாளர்கள் ஒரு சிறிய விண்ணப்பிக்கும் முறையினை கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலம் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வேலைகள் பற்றி குறிப்பு அவர்களுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் அவர்கள் தங்களுக்கான வேலையினை தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த ஆப் மூலம் +2 தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள், அரசு வேலையை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், பகுதி நேர வேலை பார்க்க விரும்புபவர்கள் என அனைவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்று நாம் காலம் காலமாக சொல்வது வழக்கமாக உள்ளது. மணப்பெண் மற்றும் மணமகன் இருவருக்கும் மனப்பொருத்தம், மங்கள பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று உடனடியாக தெரிந்து கொள்ள உதவும் செயலிதான் நித்ரா திருமணப் பொருத்தம். வரன் பார்க்க நம்முடைய குடும்ப ஜோதிடரிடம் எடுத்துச் செல்வதற்கு முன் பொதுவான பொருத்தம் இருக்கிறதா என்று இதன் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றாலும், ஒவ்வொரு திருமணத்திற்கும் அச்சாணியாக இருப்பது இருவருக்கான பொருத்தம் உள்ளதா என்று கண்டறிவது. திருமணத்திற்கு முக்கியமான பத்து பொருத்தங்கள் உள்ளதா என்று இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ேமலும் முன்பின் தெரியாத ஒருத்தரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமாக இருப்பாரா என்று இனி குழம்பி தவிக்க தேவையில்லை. ஒருவரின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு உயிர்நாடியாக இருக்கும் 12 பொருத்தங்களையும் அதற்கான விளக்கங்களையும் இந்த ஆப் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

கார்த்திக் ஷண்முகம்

Tags :
× RELATED அழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்!