×

ஊட்டியின் உண்மையான பெயர்!

உதகமண்டலத்தின் உண்மையான பெயர் - ‘ஒற்றைக்கல் மந்து’ என்பதாகும். இதனை உச்சரிக்க முடியாத வெள்ளையர்கள் ‘உடகமண்ட்’ எனக் குழறினார்கள். நாளடைவில் உடகமண்ட் நிலைத்து அதற்கு உதகமண்டலம் என்ற தமிழ் வடிவம் ஏற்பட்டது. ஆங்கிலேயர் உச்சரித்த உடகமண்ட் என்பதின் சுருக்கமே ஊட்டி. உதகமண்டலம் அரசினர் தாவரவியல் பூங்கா 1847ம் ஆண்டில், அன்றைய பிரிட்டிஷ் கவர்னர் மார்க்விஸ் ஆப் ட்வீடேல் என்பவரால் துவக்கப்பட்டது.

தர்மபுரியில் ஒரு லண்டன்!

தர்மபுரி மாவட்டத்தில் தளி என்ற ஊருக்கு, ‘லிட்டில் லண்டன்’ என்றொரு பெயர் உண்டு. காரணம், இங்கு இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் நகரத்து சீதோஷ்ண நிலை காணப் படுவதால், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அவ்வாறு அழைக்கப்பட்டது.Tags : Ooty , ஊட்டி
× RELATED ஊட்டியில் தொடரும் கனமழை நிலச்சரிவு ஏற்படும் அபாயம்