கிவி’ கப் கேக்

விப்பிங் க்ரீம் செய்முறை

ஒரு பாத்திரத்தில் கிரீமை ஊற்றி, எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு நீர்க்க இல்லாமல், கெட்டியாக நுரைக்க அடிக்கவும் (Non-Dropping consistency) பிறகு, சர்க்கரையையும், வெனிலா எஸன்ஸையும் சேர்த்து கிளறவும்.

கேக் செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை, தேன் ஆகியவற்றை எலக்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் முட்டை, அரைத்து வைத்துள்ள கிவி விழுது ஆகியவற்றை பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். பின்பு, இக்கலவையில் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், பட்டைத்தூள் சேர்த்து சிறிது சிறிதாக கலந்து Hand Beater கொண்டு கட்டியில்லாமல் கலக்கவும்.

பிறகு, இதை கப் கேக் மோல்டில் பேப்பர் கப் வைத்து ¾ பாகத்திற்கு மாவை ஊற்றி 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 10 நிமிடம் ப்ரீஹீட் செய்யப்பட்ட அவனில் 20-22 நிமிடங்கள் 150 டிகிரி செல்சியசில் பேக் செய்யவும். ஆறியதும், விப்பிங் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.மேலே அலங்கரிக்கக்ரீமில் அரைத்துள்ள கிவி விழுதையும், பொடியாக நறுக்கியதையும் கலந்து பைப்பிங் கோன் கொண்டு அலங்கரித்து, பரிமாறவும்.


× RELATED பாதாம் அல்வா