மல்ட்டிகிரைன் குக்கீஸ்

செய்முறை

ஒரு அகண்ட பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உள்ளங்கை கொண்டு நன்கு தேய்க்கவும். பின்னர், அதில் நாட்டுச்சர்க்கரை சோ்த்து நன்றாக கலக்கவும். அதில், கோதுமைமாவு, உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சோ்த்து நன்கு கலந்து பின், அதில் வறுத்துப் பொடித்த ராகி, கம்பு, தினை, வரகு, சாமை ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம், கொஞ்சமாக ஆயில் ஊற்றி பிசையவும். அந்தக் கலவையை கைகளில் உருண்டை பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும்.

பின் அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து அழுத்தவும். நன்றாக வட்ட வடிவமாக இருக்க வேண்டும். இப்படி செய்த குக்கீஸ்களை ஓவன் ட்ரேயில் போதிய இடைவெளிவிட்டு, அடுக்கி முன்னரே வெப்பமூட்டப்பட்ட ஓவனில் 10-15 நிமிடம் வரை 1500  C  வெப்பநிலையில் வேகவைத்து எடுத்து ஆறியபின், பரிமாறவும்.

ப்ரீஹீட் செய்முறை: 2000 C யில், 10 நிமிடம் டோஸ்ட் மோடில் ப்ரீஹீட் செய்யவும்.சிறுதானியங்களில் செய்த சத்து நிறைந்த இந்த குக்கீஸ் வீட்டில் உள்ள வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சாப்பிடலாம். நார்ச்சத்து இருப்பதால், நீரிழிவு நோய் இருப்பவர்களும் சாப்பிடலாம்.

× RELATED பாதாம் அல்வா