5 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: இன்று டெல்லி திரும்புகிறார் பழங்குடியினர் கலை நிகழ்ச்சி; ஜனாதிபதி ரசித்தார்

ஊட்டி: ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் 5 நாள் பயணமாக கடந்த 2ம் தேதி தமிழகம் வந்தார். அன்று மாலை சென்னையில் சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு மறைந்த முன்னாள்  முதல்வர் கலைஞரின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார். மறுநாள், சென்னையில் இருந்து  நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்றார். அங்கு  குடும்பத்தின ருடன் தங்கினார். அங்கு பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த  நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் கலை  நிகழ்ச்சிகளை ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர். இத்துடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,  தமிழகத்தில் தனது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Related Stories:

>