ரயில்களில் இனிமேல் வை-பை கிடையாது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் வை-பை வசதி திட்டத்துக்கான செலவு கூடுதலாக இருப்பதால் அதனை ரத்து செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தற்போது ரயில்களில் ‘வை-பை’ தொழில்நுட்பம் அடிப்படையிலான இணைய சேவைகளை அலைவரிசை கட்டண அடிப்படையில் பெற வேண்டியதுள்ளது. இதில் மூலதன செலவு அதிகமாகிறது. இதனை அமல்படுத்தும் செலவும் குறையவில்லை. அத்துடன், பயணிகளுக்கு போதிய இணைய அலைவரிசை கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. எனவே, இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.எனவே, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் அலைவரிசை மூலம் ஹவுரா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் வழங்கப்பட்ட இணைய சேவை ரத்து செய்யப்படுகிறது.

Related Stories:

>