‘எந்த சமூக வலைதளத்தையும் தடை செய்யும் திட்டமில்லை’

புதுடெல்லி: மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியதாவது: நாட்டு மக்களிடையே வெறுப்பு மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதற்காக சில பயனர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினாலும், எந்த சமூக வலைதளமோ அல்லது இடைத்தரகரோ இந்தியாவின் ஜனநாயகத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. நாட்டில் தற்சமயம் எந்த ஒரு சமூக வலைதளத்தையும் தடை செய்வதற்கான திட்டம் இல்லை. சமூக வலைதளங்களில் இடம்பெறும் வெறுக்கத்தக்க பதிவுகள் குறித்து பயனர்களின் குறைகளை கேட்டு அரசு உரிய முறையில் பதிலளித்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>