திருவள்ளூரில் வாகன சோதனை ரூ.5.5 லட்சம் அபராதம் வசூல்

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், திருவள்ளூர், மப்பேடு, பேரம்பாக்கம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் கடந்த மாதம் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது சுமார் 950 வாகனங்களை ஆய்வு செய்து ரூ.5.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் அதிக வேகம் -11, காப்பு சான்று இல்லாதது -18, ஓட்டுநர் உரிமம் இல்லாதது -29 மற்றும் 9 -வாகனங்கள் சிறைப்பிடித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. தணிக்கையின் போது ஓட்டுநர்களுக்கு, அறிவுரைகள் கூறி அனுப்பினார்.

Related Stories:

>