மீஞ்சூர் ஒன்றியத்தில் ஊட்டச்சத்து வார விழா

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வல்லூர் ஊராட்சியில் பட்டமந்திரி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து வார விழா, இரும்புச்சத்து குறைபாடு விழிப்புணர்வு மற்றும் தாய்ப்பால் வாரம் என முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலருக்கும் என்னென்ன சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்பது குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் மீஞ்சூர் ஒன்றிய செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு வல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் உஷா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ரவி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் இலக்கியா ராயல், வார்டு உறுப்பினர்கள் பொம்மி ராஜசேகர், முனுசாமி, புஷ்பா கோகுல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>