தொளவேடு கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஊத்துக்கோட்டை: தொளவேடு கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் தொடக்க விழாவை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். ஊத்துக்கோட்டை அருகே தொளவேடு கிராமத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மக்களைதேடி மருத்துவ திட்டத்தையும், அதற்கான முகாம் வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வீடு வீடாக சென்று நோயாளிகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அபிராமி குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் ஆ.சக்திவேல், டி.கே.சந்திரசேகர், ரவி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, கே.வி.லோகேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

திருவள்ளூர்: மக்களை தேடி மருத்துவ திட்டம் தொடக்க விழா பூந்தமல்லி ஒன்றியம், கோலப்பன்சேரி ஊராட்சியில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். சுகாதார துறை துணை இயக்குநர் பிரபாகரன், துணைத் பெருந்தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் விஜயபாபு அனைவரையும் வரவேற்றார். விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி கலந்துகொண்டு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தை தொடங்கி வைத்தும், நடமாடும் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தும் உரையாற்றினார். இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர் நெமிலிச்சேரி சுரேஷ்குமார், ஊராட்சி தலைவர்கள் பாரிவாக்கம் வி.தணிகாசலம், வயலை துரைமுருகன், துணை தலைவர் நரேஷ் மற்றும் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: