கொரோனா விழிப்புணர்வு பேரணி

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், மதுராந்தகம் நகராட்சி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, மதுராந்தகம் வட்டார அனைத்து வணிகர் பொதுநல சங்கம், மற்றும் பள்ளி தேசிய மாணவர் படை, அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்ட, கொரோனா 3வது அலையை எதிர்கொள்ளும் கொரோனா விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை மதுராந்தகம் ஆர்டிஓ சரஸ்வதி தொடங்கி வைத்தார். நகராட்சியின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் கொரோனா 3வது அலையை ஒழிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் வெளியில் வரக்கூடாது. அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். 3வது அலையின் வீரியம் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். இதில், நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ், மதுராந்தகம் வட்டார மருத்துவர் பிரியா, மருத்துவர் முகமது இப்ராஹிம், வட்டாட்சியர் நட்ராஜ், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: