வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஸ்ரீபெரும்புதூர்: வரும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்ய, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் ஊராட்சி, வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவு பட்டியலை கலெக்டர் ஆர்த்தி நேற்று வெளியிட்டார். பின்னர் அவர், கூறியதாவது. கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம  ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலின் மீது ஆட்சேபணைகள், கருத்துகள் இருந்தால், வரும் 9ம் தேதிக்குள் அதன் விவரத்தை, அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களான, வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் (வட்டார ஊராட்சி) எழுத்துப்பூர்வமாகவும், 9ம் தேதியன்று கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்காக நடக்கும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார். 

Related Stories:

>