அமெரிக்காவில் சட்டப்படி குடியேறியவர்கள் பிள்ளைகளுக்கு குடியுரிமை: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டப்படி குடியேறியவர்களின் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரிபவர்களின் பிள்ளைகள் உள்பட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பிள்ளைகள், இந்நாட்டின் குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்தியர்கள். அமெரிக்க சட்டத்தின்படி, 21 வயது நிரம்பிய பிள்ளைகள் பெற்றோரை சார்ந்திருக்க முடியாது. ஆனால், ஆயிரக்கணக்கான இந்திய பிள்ளைகள் 21 வயதை கடந்த பின்பும் நிரந்தர குடியுரிமை இன்றி தவித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோர்கள் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கும் எச்1-பி விசாதாரர்கள் ஆவார்கள்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் ஜென் சாகி நேற்று கூறுகையில், ``விசா நடைமுறைகள் உள்பட குடியேற்ற விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அதிபர் பைடனின் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது என்பது குடியேற்ற சட்ட வரைவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, குடும்பங்களின் குடியேற்றத்துக்கான நடைமுறையை எளிமைப்படுத்த, நிலுவையில் உள்ள காத்திருப்போர் பட்டியலை குறைத்தல், பயன்படுத்தாத விசாக்களை பயன்படுத்துதல், நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையை மாற்றுதல் ஆகியவையும் இதில் அடங்கும். மேலும், எச்1-பி விசாவில் வேலை பார்ப்பவர்களின் பிள்ளைகளுக்கு வயது வரம்பில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதன் மூலம், அமெரிக்காவில் சட்டப்படி குடியேறியவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: