குரூப் 1 தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் தமிழ்வழியில் படித்த சான்றிதழை பதிவு செய்வது எப்படி? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி 3ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 1 பதவிக்கான முதல்நிலை தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களில், தங்களது இணையவழி விண்ணப்பத்தில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தாங்கள் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், இப்படிவங்களை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய வடிவத்தில் உள்ள தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை உரிய அலுவலரிடமிருந்து பெற்று 100 கே.பி. முதல் 200 கே.பி. அளவில் ஸ்கேன் செய்து அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், இதுதொடர்பான விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படின், தேர்வாணையத்தின் 18004190958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: