30 வருட சினிமா வாழ்க்கை அஜித் குமார் திடீர் அறிக்கை

சென்னை: நடிகர் அஜித் குமார் சினிமாவில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுகுறித்து நேற்று அவர் தனது மேனேஜர் மூலம் வெளியிட்ட திடீர் அறிக்கையில், ‘ரசிகர்கள், நடுநிலையாளர்கள், வெறுப்பாளர்கள் ஆகிய மூவரும் ஒரு நாணயத்தின் 3 பக்கங்கள். ரசிகர்களிடம் இருந்து வரும் அன்பையும், வெறுப்பாளர்களிடம் இருந்து வரும் வெறுப்பையும், நடுநிலையாளர்களிடம் இருந்து வரும் நடுநிலையான விமர்சனங்களையும் நான் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன். வாழு. வாழவிடு. என்றும் நிபந்தனையற்ற அன்புடன் அஜித் குமார்’ என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் ‘வலிமை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Related Stories:

>