×

1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 18 வயதானவர்கள் நவம்பரில் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 1.1.2022-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்படும். 1.11.2021 முதல் 30.11.2021 வரை புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, திருத்தம் செய்ய காலஅவகாசம் அளிக்கப்படும். இந்த மனுக்கள் 20.12.2021 வரை நடவடிக்கை எடுக்கப்பட்டு, தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியல் சேர்க்கப்படுவார்கள். இதைத்தொடர்ந்து 5.1.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் பின்னர் அறிவிக்கப்படும்.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன், வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மனுதாரர் 25 வயதுக்குட்பட்டவரெனில் வயது சான்று கட்டாயமாகும்.  www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி” கைபேசி செயலி (VOTER HELP LINE Mobile App) ஆகிய ஆன்லைன் முறையின் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். ஒரு வாக்காளரின் பெயர் ஏற்கனவே பட்டியலில் இருந்தால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல், இடம் தவறவிடல் ஆகிய காரணங்களுக்காக, எந்த நேரத்திலும் வட்டாட்சியர் அல்லது மண்டல அலுவலகத்தில் படிவம் 001-ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Electoral ,Officer , 18-year-olds can add names to the list in November: Tamil Nadu Chief Electoral Officer
× RELATED வாக்காளர்களுக்கு பணம் விநியோகம்...