மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 17ம் தேதி சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. சுந்தரேஸ்வரர் நடத்திய திருவிளையாடல்களை விளக்கும் ஆவணி மூல திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நேற்று காலை 10.55 மணிக்கு மேள, தாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியானது சுவாமி சன்னதியில் அமைக்கப்பட்டுள்ள 62 அடி உயர கொடிமரத்தில் பட்டர்களால் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆக. 17ல் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது.

Related Stories:

>