அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது கால்நடை இனப்பெருக்க சட்டத்திற்கு எதிராக வழக்கு: சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கால்நடை இனப்பெருக்கச் சட்டத்திற்கு எதிரான வழக்கில், சட்டத்துறை செயலர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, நாகனாகுளத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  தமிழக அரசு கடந்த 2019ல் கால்நடை இனப்பெருக்க சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் 12வது பிரிவில் பல்வேறு பாதகமான விதிகள் உள்ளன. இதனால், மாடுகள் வளர்ப்போர் பெரும் அச்சமடைந்துள்ளனர். நாட்டு மாட்டினத்தின் இனப்பெருக்கத்தை பாதிக்கும் வகையில் இவை உள்ளன. காளைகள் அனைத்தையும் பதிவு செய்து தகுதி சான்று பெற வேண்டும். இதில், தகுதியற்றது என தெரிய வந்தால் அந்த காளைகளை அழித்துவிட வேண்டும்.

நாட்டு பசுக்களை இயற்கை முறையில் நம் நாட்டு காளைகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்த முடியாது. செயற்கையான கருவையே பயன்படுத்த வேண்டுமென கூறுகிறது. குறிப்பாக இயற்கை முறையிலான இனப்பெருக்கத்திற்கு எதிராக உள்ளது இச்சட்டம். எனவே, கால்நடை இனப்பெருக்க சட்டம் விவசாயிகளுக்கும், மாட்டின் பாதுகாப்பாளர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் உள்ளிட்ட பலருக்கும் பாதகமாக உள்ளதால், கால்நடை இனப்பெருக்க சட்டத்தின் 12வது பிரிவிலுள்ள பாதகமான விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசுவாமி, எஸ்.ஆனந்தி ஆகியோர், சட்டத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக.26க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories:

>