×

அரசு துறை தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வு கணினி வழியில் நடக்கும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பின்படி நடைபெற உள்ள துறை தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடைபெற உள்ளன. இத்துறை தேர்வுகள் தொடர்பான அறிவுரைகள், குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு மற்றும் அறிவுரைகள் குறித்த காணொலிக்காட்சி ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (https://www.tnpsc.gov.in/English/DNotification.aspx) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வுக்கு தயாராகும் வகையிலும், விண்ணப்பதாரர்கள் தேவையான அளவு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரி தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.Tags : DNPSC , In government department exams Policy type selection takes place in a computer way: DNPSC Notice
× RELATED டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய முறை...