விமான நிலைய சுங்கத்துறை முதன்மை கமிஷனராக உதய்பாஸ்கர் பொறுப்பேற்பு

சென்னை: சென்னை விமான நிலைய சுங்கத்துறை மற்றும் சரக்ககப் பிரிவுக்கு, புதிய முதன்மை கமிஷனராக கே.ஆர்.உதய்பாஸ்கர் பொறுப்பேற்றுள்ளார்.சென்னை விமான நிலைய சுங்கத்துறை கமிஷனராக ராஜன் சவுத்திரியும், சரக்கக கமிஷனராக பத்மஸ்ரீயும் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த  ஜூலை மாதம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

 இவர்களுக்கு பதிலாக, சென்னை விமான நிலையம் மற்றும் சுங்கத் துறை மற்றும் சரக்ககப்பிரிவு முதன்மை கமிஷனராக உதய்பாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 1990ம் ஆண்டு, இந்திய வருவாய் பணி பிரிவைச் சேர்ந்தவர். மும்பை, சென்னை, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் மத்திய மறைமுக வாரியம் மற்றும் சுங்கத் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனராக  பணியாற்றி வந்தவர், தற்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையம் மற்றும் சரக்ககப் பிரிவு சுங்கத் துறை முதன்மை கமிஷனராக உதய்பாஸ்கர் நேற்று  பொறுப்பேற்றார்.

Related Stories:

>