தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 9ம் தேதி (திங்கள்) காலை 6 மணியுடன் முடிவடைகிறது.தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு 2,000த்துக்கும் குறைவாக உள்ளது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் சுகாதாரத்துறை, வருவாய் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

Related Stories: