உணவு பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என்றால் விவசாய சட்டங்களை ரத்து செய்க: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..!

டெல்லி: நாட்டின் உணவு பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என்றால் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட விவசாய சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளின் மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பெகாசஸ் சர்ச்சை விவகாரம்,  வேளாண்சட்டங்கள் மற்றும் விலை உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக ஜூலை 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மக்களவை மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் அதிர்ந்தது.

மோடி அரசாங்கம் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி 3 வேளாண் சட்டங்களை சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார், இது நாட்டின் உணவு சக்திக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்க வேண்டும் என்றால், இந்த விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதன் மூலம் விவசாயிகளின் மரியாதையை மீட்டெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.

முக்கியமாக பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள், மூன்று சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியின் எல்லையில் முகாமிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில், 200 விவசாயிகள் அடங்கிய ஒரு சிறிய குழு சிறப்பு அனுமதி பெற்று மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

Related Stories:

>