வீடியோ காலில் ஆபாசமாக தோன்றி பணம் பறிக்கும் நூதனம்: வீடியோ கால் பெண்களால் பணத்தை இழந்த சென்னை இளைஞர்கள்

சென்னை: சென்னையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாகும் பெண்கள் பின்னர் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றி உரையாடி அதனை வெளியிட போவதாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடி கும்பலிடம் பல லட்சம் ரூபாய் இழந்த 4 பேர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களாலும் விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். இல்லையெனில் பணத்தை இழந்து பரிதவிப்புக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்த்தும் சம்பவங்கள் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர்கிரைம் போலீசில் கண்ணீர் மல்க புகார்கள் அளித்துள்ளனர்.

எழும்பூரில் வசிக்கும் மாணவர் ஒருவருக்கு மோனிகா குமாரி என்ற பெயரில் friendship request வந்துள்ளது. அதனை ஏற்றவுடன் சாட்டிங் செய்த அந்த பெண் தமது செல்பேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார். சற்று நேரத்தில் மாணவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் அந்த பெண் அழைத்துள்ளார். அழைப்பை ஏற்ற கல்லூரி மாணவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் பேசிய பெண் நிர்வாண கோலத்தில் இருந்ததே அதற்கு காரணம். பின் மாணவரை சமாதான படுத்திய அந்த பெண் இதெல்லாம் ஒரு விளையாட்டு தான் என ஆசையை தூண்டி அவரையும் அவ்வாறே நடக்க கூறியுள்ளார். அப்போது மாணவர் உடனான உரையாடலை பதிவு செய்துகொண்ட அந்த பெண் அதனை வைத்தே மிரட்டி பணம் பறிக்க தொடங்கியுள்ளார்.

அந்த பெண் குறித்து பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் அளித்த கல்லூரி மாணவர் அந்த பெண்ணின் எண்ணையும் பிளாக் செய்துள்ளது. அதனை தெரிந்துகொண்ட பெண் அதற்குள் மாணவர் தொடர்பான வீடியோவை அவரது தாயார் மற்றும் 8 நண்பர்களுக்கு அனுப்பிவிட்டார். கல்லூரி மாணவரிடம் இருந்து 8,000 ரூபாயை போன்பே மூலம் அந்த பெண் பறித்துள்ளார். அவரது பின்னணியில் பெரிய மோசடி கும்பலே இருப்பது தமக்கு பின்னர் தான் தெரிய வந்ததாக பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவரை போன்றே மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மாணவர் ஒருவரும் சோனாலி மிஸ்ரா என்ற பெயரில் வந்த friendship request-ஐ ஏற்றதால் 6,000 ரூபாயை இழந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மூன்றாவது நபர் 1.93 லட்சமும், தியாகராஜநகரை சேர்ந்த 4வது நபர் ஆபாச இணையதளம் மூலம் 17 லட்சம் ரூபாயை இழந்திருப்பதாகவும் சைபர்கிராம் போலீசில் தனித்தனியே புகார்கள் அளித்துள்ளனர். சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: