×

ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.2.47 கோடி அபராதம்

ஈரோடு: ஈமு கோழி மோசடி வழக்கில் யுவராஜுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை, ரூ.2.47 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈமு கோழி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக யுவராஜ் மீது புகார் அளிக்கப்பட்டது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனரான யுவராஜ், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்தவர்.

தொடர்ந்து விசாரணை நடந்துவந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2.47 கோடி அபராதம் விதித்து நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். தற்போது யுவராஜ் மற்றும் வாசு ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். தமிழ்நேசன் ஆஜராகவில்லை அவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Yawaraj ,Tamilnessan , Emu chicken scam
× RELATED ஈமூ கோழி மோசடி வழக்கில் யுவராஜ் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை