×

அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்.. !

சென்னை :அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருக்கு வயது 80.சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. அதிமுகவில் தற்போது அவைத்தலைவராக உள்ள மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன.இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் மதுசூதனனுக்கு, திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினையை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது,

இதையடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக ஆபத்தான கட்டத்தில் இருந்து மெல்ல அவர் மீண்டார். இருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில், இன்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலைக்குச் சென்றுள்ளதாகத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி, அவரது உயிர் பிரிந்தது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன். 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன்.கடந்த 2007ம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத் தலைவராக இருந்தவர் மதுசூதனன்.


Tags : Madhasuthanan , மதுசூதனன்
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...