கொரோனா 3ம் அலை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்

திருப்பூர்: கொரோனா 3ம் அலையை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுபாடுகள் அமல்படுத்தபட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா 3ம் அலையை தடுக்கும் நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மாநகராட்சி பகுதியில், ரயில் நிலையம் முதல் வளர்மதி பாலம் வரை, பழைய பேருந்து நிலையம் முதல் தென்னம்பாளையம் சிக்னல் வரை, மாநகராட்சி அலுவலகம் முதல் ஜம்மனை பாலம், மங்கலம் ரோடு வரை,  வளர்மதி பாலம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை, பெருமாள் கோவில் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, தாராபுரம் ரோடு சந்திப்பு முதல் ஈஸ்வரன் கோவில் கே.எஸ்.சி பள்ளி ரோடு வரை, கே.எஸ்.சி பள்ளி சந்திப்பு முதல் அதியமான் தெரு வரை, கே.எஸ்.சி பள்ளி சந்திப்பு முதல் பழைய மார்க்கெட் சந்திப்பு தெரு வரை, புது மார்க்கெட் வீதி, துளசி ராவ் 1,2 வீதிகள், காமராஜ் ரோடு சந்திப்பு முதல் குள்ளிச்செட்டியார் வீதி சந்திப்பு வரை,  காமராஜ் ரோடு சந்திப்பு முதல் புது மார்க்கெட் சந்திப்பு வரை, விட்டல் தாஸ் தெரு, ஷார்மியான் தெரு, ஜம்மனை சாலை, காமாட்சியம்மன் தெரு முதல் மோகன் லாட்ஜ் வரை, எம்.ஜி புதூர் முதல் காமாட்சி அம்மன் கோவில் தெரு சந்திப்பு வரை, பழைய பேருந்து நிலையம் முதல் சிடிசி கார்னர் வரை, வீரபாண்டி மெயின் ரோடு முதல் பள்ளி சந்திப்பு வரை, வீரபாண்டி பிரிவு, ஆண்டிபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு முதல் நொச்சிபாளையம் பகுதி வரை, வீரபாண்டி போலீஸ் நிலைய பகுதி,  கே.வி. ஆர் நகர் மெயின் ரோடு முதல், மங்கலம் ரோடு ஆர்.ஆர் தோட்டம் வரை, செல்லம் நகர் சந்திப்பு, ஏபிடி ரோடு சந்திப்பு முதல் பாரப்பாளையம் ரோடு சந்திப்பு வரை, நஞ்சப்பா பள்ளி ரோடு, காதர் பேட்டை,  வெள்ளியங்காடு ரோடு முத்தையன் கோவில் முதல் தாராபுரம் ரோடு சந்திப்பு வரை, குப்பாண்டம்பாளையம் பிரிவு, தாராபுரம் ரோடு உஷா தியேட்டர் சந்திப்பு முதல் அரசு மருத்துவமனை வரையிலும், நகராட்சி பகுதிகளில், பல்லடம் நகராட்சி என்.ஜு.ஆர் ரோடு, தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட என்.என் பேட்டை, பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, உடுமலை ரோடு, சர்ச் ரோடு, ஜவுளிக்கடை வீதி, வசந்தா ரோடு, உடுமலை பேட்டை நகராட்சிக்குட்பட்ட கல்பனா ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோடு,  ஸ்ரீனிவாசா வீதி,  விஓசி வீதி, கச்சேரி வீதி, ராஜேந்திரா ரோடு ஆகிய பகுதிகளில் மட்டும் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், உணவு பொருட்கள், இறைச்சி, கடைகள் தவிர மீதமுள்ள அனைத்து கடைகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.  மாவட்டத்திலுள்ள அனைத்து சூப்பர் மார்க்கெடுகள் மற்றும் பன்னாட்டு வணிக  வளாகங்கள் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.  மேலும் வணிக வளாகங்கங்களில் உள்ள உணவகங்களுக்கு பார்சல் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைகள் மட்டும் அனுமதிக்கபடுகிறது. அதேபோல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் இயங்கும் மீன், மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் சேராதவாறு ஒழுங்குப்படுத்தி கண்காணிக்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறை உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடிகள் வழியாக திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.சி.பி.சி.ஆர். (கொரோனா பரிசோதனை சான்றிதழ்) கொரோனா இல்லை எனவும், அல்லது கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணை செலுத்தப்பட்ட சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: