மானாமதுரை பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள கலர் கோழிக்குஞ்சுகள்

மானாமதுரை:  மானாமதுரை பகுதியில் நாமக்கல் பண்ணைகளில் இருந்து வந்துள்ள கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.  மானாமதுரை போலீஸ் குடியிருப்பு, தயாபுரம், சிப்காட் பஸ் ஸ்டாப், தாயமங்கலம் ரோடு, அரசு மருத்துவமனை எதிரே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கலர் கோழி குஞ்சுகள் பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு  வைக்கப்பட்டுள்ளது. நான்கு ஜோடி கோழி குஞ்சுகள் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பல்வேறு வண்ணத்தில் இருப்பதால் காண்பவர் மனதை கவர்ந்து இழுக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சாலையோரம் கீச் கீச் என்று சத்தமிட்டு கொண்டிருக்கும் கோழி குஞ்சுகளை பார்த்ததும் வாகனத்தை நிறுத்தி வாங்கி செல்கின்றனர்.  நாமக்கல்லில் இருந்து வாங்கப்படும் இந்த பிராய்லர் குஞ்சுகள் மீது பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு என வண்ணங்கள் தீட்டப்பட்டு விற்பனைக்கு வைக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக மிகவும் பாதிப்படைந்த விற்பனையாளர்கள் தற்போது ஏற்பட்ட தளர்வுகளால் விற்பனை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>